வழிப்பறி ஆசாமிகள் கைது

புழல்: கோவில்பட்டி அடுத்த காமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி(22), செங்குன்றம் பகுதியில் தங்கியிருந்து சைக்கிளில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சோழவரம் அடுத்த கும்முனூர் பைபாஸ் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் 8 பேர் கொண்ட கும்பல் அவரை மடக்கி கத்தியை காட்டி ₹3 ஆயிரத்து 300ஐ பறித்து தப்பினர். அப்போது, அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த சோழவரம் போலீசார் 8 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில்,  சோழவரம் அடுத்த சிறுனியம் பன்னீர்வாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த அப்துல் காதர்(19), மாணிக்கம் (எ) பெப்சி மணி(23), வெள்ளை (எ) அலெக்ஸ்(24), அபினேஷ்(18), அருண்(21), விக்னேஷ்(20), ஆகாஷ்(20), மகேஷ்(18) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை கைது செய்து பணம் மற்றும்  ஒரு பட்டாக் கத்தியை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>