கடம்பூர் மலைப்பகுதியில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட விவசாயி கைது

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மொசல்மடுவு கிராமத்தில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கடம்பூர் போலீசாருக்கு தகவல்  கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மணி (49) என்பவரது மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 3 அடி உயரத்திற்கு செழித்து வளர்ந்திருந்தது.

போலீசார் விவசாயி மணியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா செடி பயிரிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 29 கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து மணியை கைது செய்த கடம்பூர் போலீசார் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Related Stories: