செல்போனில் பேசிக்கொண்டே குழந்தையுடன் கழிவுநீர் குழிக்குள் விழுந்த இளம்பெண்!: அரியானாவில் பரபரப்பு

அரியானா: அரியானாவில் கைக்குழந்தையுடன் செல்போனில் பேசிக்கொண்டே நடந்து சென்ற பெண் சாலையில் இருந்த கழிவுநீர் குழிக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பரிதாபாத்தில் உள்ள ஹவாஹர் காலனியில் இளம்பெண் ஒருவர் 9 மாத கைக்குழந்தையுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது செல்போனில் பேசிக்கொண்டே சென்றதால் சாலையின் நடுவே இருந்த கழிவுநீர் குழியை கவனிக்காத அந்த பெண், அதில் திடீரென தவறி விழுந்தார்.

இதை தொடர்ந்து, சாலைகளில் நடந்து சென்றவர்களில் ஒருவர் உடனடியாக கழிவுநீர் குழிக்குள் இறங்கி இளம்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்றியதால் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் பிழைத்தனர். அதன்பின் அந்த குழி பொதுமக்களால் தற்காலிகமாக தடுப்பு கொண்டு மூடப்பட்டுள்ளது. தற்போது குழந்தையுடன் கழிவுநீர் குழிக்குள் இளம்பெண் விழும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

More
>