உபி.யில் துணை சபாநாயகர் தேர்தல் சமாஜ்வாடியை உடைக்கும் பாஜ

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில், பாஜ.வின் ஆதரவுடன் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற உள்ளார். உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதில், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏ.வான நிதின் அகர்வால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு ஆளும் பாஜ ஆதரவு தெரிவித்துள்ளது. அதேபோல், சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நரேந்திர வர்மாவும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

  இது குறித்து அவர் கூறுகையில், ‘‘வழக்கமான பாரம்பரிய முறைப்படி, துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியினருக்கு ஒதுக்கப்படும். நிதின் எனது இளைய சகோதரர். சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின், கட்சிக்கு எதிராக பணியாற்றத் தொடங்கி விட்டார். துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியினருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், பாஜ இந்த பாரம்பரியத்தை உடைக்கிறது. ஆளும்  கட்சியிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க முடியாது,\” என்றார். கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு,  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு இப்போதுதான் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

Related Stories: