ஆயுத பூஜை கொண்டாட்டம் திருஷ்டி கழித்து சாலையில் வீசிய பூசணிக்காய்களால் விபத்து அபாயம்

கரூர்: கரூர் நகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளில் பரவி கிடக்கும் பூசணிக்காய்களை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.அக்டோபர் 14ம் தேதி அன்று ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. தொழில் நகரமான கரூரிலும் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை முன்னிட்டு அனைத்து வர்த்தக நிறுவனத்தினர்களும், கடைகளில் சுவாமி தரிசனம் செய்து, பூசணிக்காய் உடைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதன்படி, நேற்று முன்தினம் மாலை ஆயுதபூஜை கொண்டாடப்பட்ட நிலையில், நகரப்பகுதிகளான செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், கோவை சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், பசுபதிபாளையம், தாந்தோணிமலை, காந்திகிராமம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளின் சந்திப்பு பகுதிகளில் பூசணிக்காய்கள் உடைக்கப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது.இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் சாலைகளில் பரவி கிடக்கும் பூசணி காய்கள் மற்றும் பூஜை பொருட்களை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

More
>