பாகிஸ்தான், வங்கதேச எல்லை மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பில் மாற்றம்

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படையின் எல்லை அதிகார வரம்பை ஒன்றிய அரசு மாற்றி அமைத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலும், ஆயுத கடத்தலும் நடக்கின்றன. இந்த எல்லையின் பாதுகாப்பு பொறுப்பை எல்லை பாதுகாப்பு படை ஏற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவில், ஒரு சில மாநிலங்களில் இதன் எல்லை அதிகார வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்களில் குறைக்கப்பட்டுள்ளது.

* குஜராத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்டு இருந்த  80 கிமீ எல்லை வரம்பு, தற்போது 50 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிபுரா, மேகாலயாவில் 80 கிமீ ஆக இருந்த எல்லை வரம்பு, தற்போது 20 கிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது.

* பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் 15 கிமீ வரம்பு இருந்தது. இது, புதிய உத்தரவின் மூலம் ஒரே மாதிரியாக 50 கிமீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 * ராஜஸ்தானில் ஏற்கனவே இருந்த 50 கிமீ வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை.

* ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களி்ல் ஏற்கனவே இருந்த 50 கிமீ வரம்பு அப்படியே தொடர்கிறது.

Related Stories: