எல்லை பிரச்னைக்கு தீர்வு காண அசாம் - மேகாலயா அமைச்சர்கள் பேச்சு: உறுதியான முடிவின்றி முடிந்தது

சில்சார்: அசாம் மாநிலம் பிரிக்கப்பட்டு, கடந்த 1972ம் ஆண்டு மேகாலயா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தை பிரிக்கும்போது, நிலப்பகுதிகளை பிரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட, ‘அசாம் மறுசீரமைப்பு சட்டம் -1971’ஐ, மேகாலயா அரசு எதிர்த்து வருகிறது. இரு மாநிலங்களும் 884.9 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில், 14 பகுதிகளில் எல்லை பிரச்னை நிலவுகிறது. இதேபோல், மிசோரம் - அசாம் இடையிலும் எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த எல்லை பிரச்னை தொடர்பாக அசாம் - மேகாலயா மாநில அமைச்சர்கள் நேற்று முன்தினம் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.  

அசாம் சார்பில் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் சந்திர மோகன் பட்வாரியும், மேகாலயா சார்பில் உள்துறை அமைச்சர் லக்மன் ரிம்புயும் பங்கேற்றனர். இதில், இரு மாநிலங்களும் தங்கள் எல்லை தொடர்பான ஆவணங்களை பகிர்ந்து கொண்டன. இந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்கும் வகையில் அமைந்ததாக இருதரப்பும் கூறினாலும், உறுதியான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. அடுத்ததாக, சில்லாங்கில் இந்த மாதமே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: