விவசாயம் செழிக்க வேண்டி சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

மேலூர்: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே சிவாலயத்தில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.    மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்கம், ஸ்ரீ சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில், புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சங்கரலிங்கம் சுவாமி, நந்தியம் பெருமாளுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தர்கள் சிவ புராணம், கோளாறு பதிகம், தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாராயணம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் கச்சிராயன்பட்டி அங்கப்பன் கமலா குடும்பத்தினர், ராஜேஷ் குருக்கள் மற்றும் சங்கரநாராயணர் கோயில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள்  செய்திருந்தனர்.

Related Stories: