உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மோகனபிரியாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்  ஆலப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சல்குரு. இவரது மகள்  எஸ்.மோகனப்பிரியா. படித்த இளம் வேட்பாளரான இவர், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதேபோல், சிங்கபெருமாள் கோயில் 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் கவுஸ்பாஷாவின்  மகனும் சிங்கபெருமாள் கோயில்  சுலைமான் மருத்துவமனை நிர்வாக இயக்குநருமான மருத்துவர் ஷாகிர்பாஷா போட்டியிடுகிறார்.

இதையொட்டி, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு, சிங்கபெருமாள் கோயில், ஆப்பூர், வேங்கடாபுரம், குருவம்மேடு, பாலூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக வேனில் சென்று, வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அதிமுக  மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மோகனபிரியா பேசுகையில், ‘‘என்னை வெற்றி பெற செய்தால், என்னுடைய எல்லையில்  உள்ள ஊராட்சிகளின் அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் உடனடியாக அமைத்து தருவேன்.

அதேபோல் உங்களது அனைத்து பிரச்னைகளையும், கோரிக்கைகளையும்  மாவட்ட குழு உறுப்பினர் என்ற முறையில் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக கொண்டு சென்று, உடனடியாக செய்து முடிப்பேன் என்றார். இளம் வேட்பாளர் மோகனப்ரியா, இந்த வாக்குறுதியை முன்வைத்து, பொதுமக்களின் ஆதரவை வெகுவாக கவர்ந்து வருகிறார். அவரது எளிமையான இந்த அணுகுமுறை பொதுமக்களுக்கு பிடித்துள்ளதால், செல்லும் இடமெல்லாம், மோகனப்பிரியாவுக்கு ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த பிரசாரத்தில், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: