பெரம்பூரில் பைக் ரேஸ் 15 பைக்குகள் பறிமுதல்

பெரம்பூர்: பெரம்பூர் மேல்பட்டி பொண்ணப்பன் தெரு மற்றும் பி.பி.சாலை சந்திப்பு போன்ற பகுதிகளில் செம்பியம் உதவி கமிஷனர் பாபு, செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன்  தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் சிலர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

20க்கும் மேற்பட்ட பைக்குகளில் மூன்று பேர் சென்றதால் அவர்களுக்கு அபராதம் விதித்தனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 3 பேர் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  மேலும், 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அதிக திறன் இஞ்சின் கொண்ட பைக்குகளை ஓடிவந்தனர். அவர்களின் பெற்றோர்களை நேரில்அழைத்த போலீசார் கடுமையாக எச்சரித்து, அனுப்பினர்.

Related Stories:

>