கடலோர தூய்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணி

நாகை: சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு நாகை புதிய கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மை பணி நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 3வது சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி நேற்று சர்வதேச கடலோர தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது. நாகை புதிய கடற்கரை சாலையில் இருந்து ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. கலெக்டர் அருண் தம்புராஜ் பேரணியை தொடங்கி வைத்தார்.

கடற்கரை தூய்மை நமது கடமை என்ற விழிப்புணர்வு கோஷங்களுடன் புதிய கடற்கரையை பேரணி வந்தடைந்தது. அங்கு கடற்கரையை தூய்மை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் கடற்கரையை தூய்மை செய்தனர். ஜெயலலிதா பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார், முதல்வர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>