திண்டுக்கல் பெண் கொலையில் 3 பேர் கைது: 5 பேர் சரண்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் கடந்த 2012, ஜன. 10ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 5வது குற்றவாளியான  நிர்மலா (70), கடந்த 22ம் தேதி செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி அருகே மர்ம நபர்களால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலை சின்னாளப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே பதுங்கி இருந்த  3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில்,  நிர்மலா கொலையில்  தொடர்புடைய  தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தென்மண்டல செயலாளரான நடராஜன் (45), திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டிச் சேர்ந்த அய்யனார் (21), பூபாலன் (21) ஆகிய 3 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர். பின்பு திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் மாஜிஸ்திரேட்  முன் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

திருச்சி நீதிமன்றத்தில் 5 பேர் சரண்: இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த அருண்பாண்டி (18), சங்கிலிகருப்பன்(28), தமிழ்செல்வன்(22), வேடசந்தூர் ரமேஷ்குமார்(33), அம்புலிப்பட்டி முத்துமணி(23) ஆகிய 5 பேரும், முன்னிலையில் திருச்சி ஜேஎம் 4 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். இந்த மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: