திருச்சி விமான நிலையத்தில் ரூ1 மதிப்புள்ள கோடி போதை பொருள் பறிமுதல்: 2 சென்னை ஆசாமிகள் சிக்கினர்

திருச்சி: திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கூரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு திருச்சியிலிருந்து வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்ப வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், சுமார் 10 கிலோ எடைகொண்ட கவர் ஒன்றை கூரியர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப வந்தது தெரிய வந்தது.

அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார்(32) என்பதும் தெரியவந்தது. அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை வெளிநாட்டுக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் திருச்சியில் இருந்து நேற்று காலை சார்ஜாவுக்கு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தயாராக இருந்தது.

இதில் பயணிக்க இருந்த பயணிகளின் உடமை, ஆவணங்களை இமிகிரேஷன் மற்றும் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 2 பேரின் உடமைகளை சோதனை செய்தபோது ஆடைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான ரியால் நோட்டுகளை மறைத்து எடுத்து செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள், நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி முகமதுஅலிஜின்னா, மவுண்ட் ரோடு சையது உஸ்மான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து  ரியால் கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: