நாடு முழுவதும் வரும் 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: விவசாயிகளுக்கு கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆதரவு..!!

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் வரும் 27ம் தேதி முழு அடைப்பு  போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக கேரளாவிலும் முழு அடைப்பு நடைபெறும் என ஆளுங்கட்சியான மாக்சிஸ்ட் அறிவித்துள்ளது. கேரளாவில், மாஸ்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் வட மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் 300 நாட்களை கடந்து ஓராண்டை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், வருகிற 27ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டக்குழுவினர் அறிவித்து உள்ளனர். மேலும் அரசை விமர்சிப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த கோரிக்கைகளை உள்ளடக்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, பல்வேறு கட்சிகள் ஆகியவற்றுக்கு அழைப்பை ஏற்று வரும் 27ஆம் நாள் பாரத் பந்த் நடைபெற உள்ளது. இதற்கு மாநிலங்கள் தோறும் ஆதரவு திரட்டி வருகின்றனர். கேரளாவிலும் வருகிற 27ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம், ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்து கேரளாவில் முழு அடைப்பு நடைபெறும் என்றும், போக்குவரத்து ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட 100 அமைப்புகள் பங்கேற்க உள்ளன.

அன்றைய தினம் ஆங்காங்கே ,ரயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்டு கட்சியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டு கட்சி, முழு அடைப்பு நடைபெறும் என்று ஆதரவு தெரிவித்துள்ளதால், அன்றைய தினம் கேரளாவில் முழுமையான பாரத் பந்த் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>