அறநிலையத்துறைக்கு எதிராக செயல்படும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரிக்கை

சென்னை: அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை சில நபர்கள் சில நாட்களுக்கு முன்பு பக்தி என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றனர். அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதேபோல் துறைக்கு எதிரான பல்வேறு குழுக்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை 5 அறிவிப்புகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மொட்டை போடும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அக்டோபர் மாதத்துக்குள்செயல்படுத்தப்படும். நுங்கம்பாக்கத்தில் தனியார் கல்லூரி அமைந்துள்ள இடம் எந்த கோயிலுக்கு சொந்தமானது என்று தெரியவில்லை. நாங்கள் கோப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் கோயிலுக்கு சொந்தமான இடம் இல்லை. குயின்ஸ்லேண்ட் அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது தான். அதனை மீட்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். இக்கூட்டத்தில் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

* கோயில் பணியில் 3 நீதிபதிகள் நியமனம்

தமிழகத்தில், இந்தாண்டுக்குள் 500 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்படும். கோயில்கள் மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவதை கண்காணிக்க சென்னை மண்டலத்திற்கு நீதிபதி ராஜீ, மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை, ஒன்றிய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.

Related Stories: