சேலத்தில் தொடர் நடவடிக்கை ஒரே நபருக்கு ரூ.41 லட்சம் நகைக்கடன்; காசாளர் சஸ்பெண்ட்: அதிமுக ஆட்சி மோசடி அம்பலம்

சேலம்: சேலத்தில் ஒரே நபருக்கு ரூ.41 லட்சம் நகைக்கடன் வழங்கிய காசாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கூட்டுறவு கடன் சங்கத்தின் தொப்பூர் செக்காரப்பட்டி சேவை மையத்தில், தர்மபுரி மாவட்டம் பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் 187 பவுன் நகையை அடகு வைத்து ரூ.41 லட்சம் கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தொப்பூர் சேவை மையத்தின் கணக்காளர் கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதனிடையே வெங்கடேஷ் தர்மபுரியில் உள்ள கூட்டுறவு வங்கியிலும் ரூ.15 லட்சம் நகைக்கடன் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதே போல், இரும்பாலை பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில், ஒருவருக்கு ரூ.51 லட்சம் நகைக் கடன் வழங்கி இருப்பதும், நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் போலி நகைக்கு கடன் வழங்கப்பட்டதும் 3 எழுத்தர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், சங்கத் தலைவரும் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலும் சில கூட்டுறவு சங்கங்களில் அதிகாரிகள் அடகு நகைகளை தர பரிசோதனை செய்து வருகின்றனர்.

Related Stories: