போச்சம்பள்ளியில் மண்டல வனப்பாதுகாவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, கடந்த ஜூன் 3ம் தேதி கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டம் மூலம் வேம்பு, புங்கன், பாதாம், ஆலன், அரசன், அத்தி, பூவரசன், ஈட்டி, சந்தனம் போன்ற 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. நேற்று அந்த மரங்களை தர்மபுரி மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, மரக்கன்றுகள் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியை கண்டு பாராட்டினார்.

இதேபோல், சிப்காட் தொழிற்பூங்காவில் திட்டம் 1ன் கீழ் 2020-21ம் ஆண்டு நடவு செய்யப்பட்ட 38,624 மரக்கன்றுகளையும், திட்டம் 2ன் கீழ் 2021-22ல் நடவு செய்யப்பட்ட 40,158 மரக்கன்றுகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட அலுவலர் மகேந்திரன், பர்கூர் சிப்காட் திட்ட அலுவலர் ரங்கசாமி, வனச்சரக அலுவலர்கள் குமார், அருண்குமார், சந்தியா, சோமசேகர் மற்றும் வனவர்கள் உடனிருந்தனர்.

Related Stories: