ஒன்றிய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்-மாவட்டத்தில் 434 இடங்களில் நடந்தது

ராமநாதபுரம் : விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை இன்மை, பொருளாதார சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி மாநில துணை தலைவர் பவானி ராஜேந்திரன், ஒன்றிய திமுக செயலர் பிரபாகரன்,  நகர் பொறுப்பாளர்கள் கார்மேகம், பிரவின் தங்கம், தலைமை செயற்குழு  உறுப்பினர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு,  அச்சுந்தன்வயலில் ஊராட்சி தலைவர் சகிகலா லிங்கம்  உள்பட பலர் பங்கேற்றனர்.

மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் அழகன்குளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். மண்டபம் யூனியன் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சி முன்னாள் தலைவர் முகமது முர்சுதீன், கிளை செயலாளர் முகமது நௌபர் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் காந்தகுமார் தலைமையில் மண்டபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அப்துல் ஒசீது, அயூப் கான், கஜினி முகமது, இப்ராஹீம் ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

பரமக்குடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முருகேசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்தியா குணசேகரன்,ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் கதிரவன்,நகர் செயலாளர் சேது கருணாநிதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், தளையடிக்கோட்டை முனியாண்டி,நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம் கலந்து கொண்டனர். இதேபோல் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் திசைவீரன், மாநிலத் துணைத் தலைவர் திவாகரன்,போகலூர் ஒன்றிய குழு துணைத் தலைவர் பூமிநாதன், மாவட்ட கலை மற்றும் பகுத்தறிவு அணி செயலாளர் செந்தில் செல்வானந்த், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சர்மிளா  உள்பட கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொண்டியில் திமுக நகர் செயலாளர் இஸ்மத் நானா தலைமை வகித்தார். காங்கிரஸ் காத்தார் ராஜா, மமக ஜிப்ரி, விடுதலை சிறுத்தைகள் ராதாகிருஷ்ணன், சிஐடியூ நாகூர் பிச்சை கலந்து கொண்டனர்.

சாயல்குடி: கடலாடி அருகே மேலச்செல்வனூரில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி தலைமையும், எம்.பி நவாஸ்கனி முன்னிலையும் வகித்தனர். கடலாடி பேருந்து நிலையம் அருகே திமுக ஒன்றிய பொறுப்பாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் தனசேகரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் மயில்வாகணன் முன்னிலை வகித்தனர். சாயல்குடி  ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடந்தது. முதுகுளத்தூரில் ஒன்றிய பொறுப்பாளர்(மேற்கு) சண்முகம், ஒன்றிய செயலாளர் (கிழக்கு) பூபதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணலூரில் ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி ராமர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கீழக்கரையில் நகர் செயலாளர் பசீர், இளைஞரணி ஹமீது சுல்தான் கருப்புக்கொடி ஏற்றி 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் திமுக நகர் செயலாளர் நாசர்கான் தலைமை வகித்தார். ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ. தாலுகா குழு உறுப்பினர் அசோக் தலைமை வகித்தார். மேலத்தெருவில் காங்கிரஸ் மாநிலக்குழு உறுப்பினர் பாரிராஜன் தலைமை வகித்தார்.

கமுதியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வாசுதேவன், ஒன்றிய துணைச் சேர்மன் சித்ராதேவி அய்யனார், நகர பொறுப்பாளர் பாலமுருகன் பங்கேற்றனர். மேலும் ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்செல்விபோஸ். தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories:

>