பாலக்காட்டில் பரபரப்பு: ஆயுர்வேத மருந்து கடை பெயரில் போலி தொலைபேசி இணைப்பகம்

* உரிமையாளர் கைது

* தீவிரவாதிகளுடன் தொடர்பா?

* தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: பாலக்காட்டில் ஆயுர்வேத மருந்துகடையின் பெயரில் போலி தொலைப்பேசி இணைப்பகம் நடத்தி வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் போலி தொலைபேசி இணைப்பகத்தை ஒரு கும்பல் நடத்தி வருவதாக ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பல் வெளிநாடுகளில் இருந்து வரும் போன் அழைப்புகளை, உள்ளூர் அழைப்பாக மாற்றி மோசடி செய்து வந்துள்ளனர். இந்த வசதியை தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் பெங்களூரூ மற்றும் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட பகுதியில் ஒன்றிய உளவுத்துறை மற்றும் மாநில போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போலி தொலைபேசி இணைப்பகம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இததொடரப்ாக 10க்கும் ேமற்பட்டோர் கைது செய்பயபட்டனர்.

இந்தநிலையில் பாலக்காட்டில் மேட்டுப்பாளையம் தெருவில் ஆயுர்வேத மருந்து கடை என்ற பெயரில், போலி தொலைபேசி இணைப்பகம் ஒருவர் நடத்தி வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பாலக்காடு டிஎஸ்பி ஹரிதாஸ் தலைமையில் போலீசார் நடத்திய விசாரணையில், ‘கீர்த்தி ஆயுர்வேதிக்ஸ்’ என்ற பெயரில் போலி தொலைபேசி இணைப்பகம் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் கோழிக்கோட்டை சேர்ந்த மைதீன் கோயாவை(63) கைது செய்தனர். இவரிடம் இருந்து பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ நிறுவனத்தின் 200க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசராணையில், இவர் போலி ெதாலைபேசி இணைப்பகம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

மேலும் இவரது 2 வங்கி கணக்குகளில் பல லட்சம் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 8 வருடங்களாக ஆயுர்வேதிக் கடை என்ற பெயரில் இந்த போலி தொலைபேசி இணைப்பகத்தை செயல்படுத்தி வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டு, மலப்புரத்தில் போலி தொலைபேசி இணைப்பகம் நடத்தி வந்ததாகவும் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சோதனை நடத்த போது தலைமறைவாகி விட்டதால் இதுவரை சிக்காமல் இருந்துள்ளார். இதேபோல் இவரது மகன் சரபுதீன் மற்றும் தம்பி செபீர் ஆகியோரும் போலி தொலைபேசி இணைப்பகம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின் போலீசார், மைதீன் கோயாவை பாலக்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எனவே இந்த 3 பேருக்கும் தீவரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர். விசாரணையின் போது மைதீன் கோயா எந்த தகவலும் தெரிவிக்க மறுப்பதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>