தேனி பெண் குறித்து யூடியூப்பில் ஆபாச பேச்சு டிக்டாக் திவ்யா கைது

தேனி,:  தேனி மாவட்டம், நாகலாபுரத்தை சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தவர். இதேபோல டிக்டாக்கில் பிரபலமானவர் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா. டிக்டாக்கை முடக்கிய பின்பு யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக மோதல் இருந்து வந்தது. கடந்தாண்டு சுகந்தி, தன்னையும், குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக திவ்யா மீது புகாரளித்தார். இதனடிப்படையில் பழனிச்செட்டிபட்டி போலீசார் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 8ம் தேதி திவ்யா சமூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக தேனி சைபர் கிரைம் போலீசாரிடம் சுகந்தி புகாரளித்தார். புகார் மனு மீது விசாரணையை துவங்கிய சைபர் கிரைம் போலீசார் திவ்யாவை பிடிக்க தனிப்படை அமைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் சுற்றித்திரிந்த திவ்யாவை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை தேனி எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து திவ்யாவை கைது செய்தனர்.

Related Stories:

>