பாசெட்டர்: வெஸ்ட் இண்டீசின் டி20 லீக் தொடரான கரிபியன் லீக் தொடரில் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் ‘கரிபியன் லீக்’ டி20 போட்டியின் 9வது தொடர் ஆக.26ம் தேதி தொடங்கியது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ட செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பைனலுக்கு தகுதிப் பெற்றன.பைனலில் டாஸ் வென்று முதலில் களம் கண்ட ஆந்த்ரே பிளெட்சர் தலைமையிலான செயின்ட் லூசியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால் 43(32பந்து, 5பவுண்டரி, 2சிக்சர்), ரோஸ்டன் சேஸ் 43(40பந்து , 4பவுண்டரி, 2சிக்சர்), கீமோ பால் 39(21பந்து, 5சிக்சர்) ரன் விளாசினர். செயின்ட் கிட்ஸ் தரப்பில் பாவத் அகமது, நசீம் ஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.