பொன்சி பண மோசடி வழக்கு: மே.வங்க அமைச்சரிடம் சிபிஐ விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில், சாரதா, ரோஸ் வேலி நிதி நிறுவனங்களைப் போல ஐ-கோர் நிதி நிறுவனமும் மக்கள் பணத்தை ஏமாற்றி மோசடி செய்தது. இந்த ஊழல் வழக்கையும் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐ-கோர் பொன்சி ஊழல் வழக்கு தொடர்பாக, மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பரதா சட்டர்ஜியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவரிடமும் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணை 2 மணி நேரம் நடந்தது.  ஏற்கனவே, இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் அமைச்சர் பார்தாவுக்கு அமலாக்கத் துறையும் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் சம்மன்:  மேற்கு அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களிடம் விசாரணை நடத்துவது, அவர்களின் பெயர்களை குற்றப்பத்திரிகையில் சேர்ப்பது தொடர்பாக தன்னிடம் ஏன் முன் அனுமதி பெறவில்லை என்று இம்மாநில சபாநாயகர் பிமன் பாந்யோபத்யாயா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, வரும் 22ம் தேதி சட்டப்பேரவைக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உயரதிகாரிகளுக்கு அவர் சம்மன் அனுப்பி உள்ளார்.

Related Stories: