செந்துறை அருகே மரக்கன்றுகள், பனை விதைகளை ஆர்வத்துடன் நடும் கிராம மக்கள்

செந்துறை : செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் 1 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 60 ஆயிரம் பனைவிதைகள் நடும் திட்டத்தினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சில தினங்களுக்கு முன் மணக்கால் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில், கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு வைத்தனர்.

Related Stories: