காற்று மாசு அதிகரிப்பால் இந்தியர்கள் ஆயுட்காலம் 9 ஆண்டுகள் குறைகிறது: மகாராஷ்டிரா, மபி.யில் மேலும் மோசம்

புதுடெல்லி: உலகில் மிகவும் மாசுபட்ட நாடாக இந்தியா உள்ளது. காற்று மாசுனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுத்தமான காற்றை சுவாசித்து ஒரு சராசரி மனிதன் எவ்வளவு நாட்கள் வாழலாம் என்று சிகாகோ பல்கலை கழகத்தின் காற்றின் தர வாழ்க்கை அட்டவணை மையம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:  

*  2019ம் ஆண்டின் மாசு நிலைகள் தொடர்ந்தால், வட  இந்தியாவில் வசிப்பவர்கள் ஒன்பது ஆண்டுகளுக்கும் அதிகமான ஆயுட்காலத்தை  இழக்க நேரிடும். இந்த பிராந்தியம் உலகின் மிக மோசமான காற்று மாசுபாட்டை  அனுபவிக்கிறது.

* 2019ம் ஆண்டில் இந்தியாவின் சராசரி காற்று மாசு ஒரு கன மீட்டருக்கு 70.3 மைக்ரோகிராமாக உள்ளது. உலகளவில் இது மிகவும் மோசமான பாதிப்பாகும்.

* 2000ம் ஆண்டின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், ​மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் மாசு மிகவும் அதிகரித்துள்ளது.இதனால், இம்மாநில மக்கள் கூடுதலாக 2.5 முதல் 2.9 ஆண்டுகள் ஆயுட்காலத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.

* உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி காற்று மாசு குறைக்கப்பட்டால் சராசரி நபர் கூடுதலாக 5.6 ஆண்டுகள் வாழ்வார்.

Related Stories: