செருப்பால் அடித்த சூர்யாதேவி ‘டிக்டாக்’ பிரபலம் போலீசுக்கு சவால் வீடியோ

மதுரை: டிக்டாக் பிரபலமான சூர்யாதேவி, சிக்கா என்பவரை செருப்பால் அடித்தது தொடர்பான வழக்கு குறித்து வெளியிட்ட வீடியோவில் போலீசுக்கு சவால் விட்டுள்ளார். அவரிடம் அடிபட்ட சிக்கா தனது மீசையை எடுத்துள்ளார். இருவரது வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை, சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர் என்ற சிக்கா (41). திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இருவரும் டிக்டாக் பிரபலங்கள். சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு இடையில் அடிக்கடி விவாதங்கள், மோதல்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக சூர்யாதேவி கடந்த 2ம் தேதி மதுரை வந்து, சிக்காவை செருப்பால் அடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுதொடர்பாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

உடல்நலம் சரியில்லை என்று கூறி, இதுதொடர்பான விசாரணைக்கு சூர்யா தேவி, இதுவரை ஆஜராகவில்லை. இதற்கிடையே சூர்யாதேவி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘‘நான் பார்க்காத போலீசா? நான் பார்க்காத வழக்கா? என் வீட்டுக்கு எந்த போலீஸ் வருகிறது என பார்க்கிறேன்?’’ என்று போலீசுக்கே சவால் விடும் வகையில் பேசியுள்ளார். இந்த வீடியோவும் பரவி வருகிறது. இந்நிலையில் சிக்கா தற்போது சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தனது மீசையை தானே எடுத்துக் கொண்டு, வெளியிட்ட வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Stories: