மம்மூட்டி, மோகன்லாலுக்கு அமீரகத்தின் கோல்டன் விசா

திருவனந்தபுரம்:  கலை மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. பிரபல மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று துபாயில்நடந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சித் துறை தலைவர் முகமது அலி அல் ஷோராபா அல் ஹம்மாதி,  கோல்டன் விசா வழங்கினார். இந்த கவுரவம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மம்மூட்டியும், மலையாள சினிமாவுக்கு கிடைத்த அங்கீகாரம் என மோகன்லாலும் கூறினார்.

Related Stories: