உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி: நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி

நைரோபி: உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி, கென்யாவின் நைரோபி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஜாவ்லின் துரோ போட்டியில் இந்திய வீரர்களான அஜய்ராஜ் மற்றும் ஜெய்குமார் ஆகியோர் 5 மற்றும் 6வது இடங்களை இறுதிப்போட்டியில் பெற்றனர். இவர்கள் இறுதிபோட்டியில் பதக்கம் பெறுவார்கள் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இதுபோல் பெண்களுக்கான 100 மீட்டர் தடகள போட்டியில் நந்தினி அக்சரா அரையிறுதி போட்டியில் நுழைந்தாலும், இறுதி போட்டியில் தோற்றுவிட்டார்.  தற்போது நீளம் தாண்டுதலில் சாதனை புரிந்து இறுதிப்போட்டியில் இடம் பெற்றுள்ள வீராங்கனை ஷைலிசிங் இந்தியாவின் மானத்தை காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  

ஏற்கனவே ஷைலிசிங் யு20 போட்டியில் தேசிய சாதனையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று 3வது நாளாக நடந்த தடகள போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் 6.40 மீட்டர் தாண்டி சாதனை படைத்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்த ஷைலிசிங் முதலில் 6.34 மீட்டரையும், 2வதாக 5.98 மீட்டரையும் தாண்டி நாளை நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டியில் பதக்கத்தை வென்று உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஷைலிசிங் சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Related Stories: