2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக வேண்டும்: வெற்றியே நமது இலக்கு: ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி பேச்சு

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 19 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆன ஆலோசனை கூட்டத்தில் சோனியா காந்தி பேசியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி கூறியதாவது; 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராக சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: