தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி: டிராவிட் மட்டுமே விண்ணப்பம்..! தேதியை நீட்டித்தது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் உள்ளார். இவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. இதற்கான காலக்கெடு கடந்த 15ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் விண்ணப்பம் அனுப்புவதற்கான காலக்கெடுவை மேலும் சில நாட்களுக்கு பி.சி.சி.ஐ. நீட்டித்துள்ளது. டி20 உலகக்கோப்பையுடன் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அந்த பதவிக்கு ராகுல் டிராவிட் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி டிராவிட் சென்றுவிட்டால் தேசிய கிரிக்கெட் அகாடமி பதவிக்கு வேறு நபரை தேடுவதற்காக விண்ணப்ப தேதியை பிசிசிஐ நீட்டித்துள்ளது. என்சிஏவில் நாகர்கோடி, சக்கரவர்த்தி: வருண் சக்கரவர்த்தி, கமலேஷ் நாகர்கோட்டி ஆகியோர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சுப்மான் கில் உடன் இணைந்துள்ளனர். ஐபிஎல்லில் விளையாடுவதற்கு முன் உடற்தகுதியை நிரூபிக்க அவர்கள் அங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளனர். தகுதி சான்று பெற்றவருடன் அவர்கள் யுஏஇ புறப்படுவார்கள்.

Related Stories: