விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்டார் மீரா மிதுன்; உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் அபிஷேக் ஷாம் கைது: விசாரனைக்கு மறுப்பு

சென்னை: நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷியாமையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்ததனர்.  மீரா மிதுனின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த புகாரில் அபிஷேக் ஷாம் கைதாகியுள்ளார். நடிகையும், மாடல் அழகியுமான நடிகை மீரா மிதுன் டுவிட்டர’ பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீரா மிதுன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருப்பதாக வெளியான தகவலையடுத்து சைபர் கிரைம் போலீசார் கேரளா விரைந்தனர். குறிப்பிட்ட இடத்தில் மீரா மிதுனை கைது செய்ய போலீசார் முயன்றனர்.

அப்போது திடீரென மீரா மிதுன், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்ய ஆரம்பித்தார். இவர்கள் என்னை கைது செய்ய வருகிறார்கள். ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடக்க வேண்டுமா? என்னை கைது செய்தால் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று வீடியோவில் பேசி உடனடியாக அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டார். ஆனால் சைபர் கிரைம் போலீசார் எதையுமே பொருட்படுத்தாமல் பெண் போலீசார் உதவியுடன் மீரா மிதுனை கைது செய்தனர். மீரா மிதுனை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.

சென்னை அழைத்து வரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறையினர் தற்பொழுது விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வாக்குமூலம் தராமல் நடிகை மீரா மிதுன் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என தொடர்ந்து அடம்பிடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: