போலீஸ் வேலைக்கு சென்னை திருநங்கை தேர்வு

சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி 7வது வார்டு தர்மாபுரியைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி இருளப்பன். இவரது மகள் கார்த்திக் (எ) தீபிகா (27). திருநங்கையான இவர், போலீஸ் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டார்.  சென்னையில் நடந்த உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். இதையடுத்து அவருக்கு போலீஸ் வேலை உறுதியானது. தீபிகா ஏற்கனவே மூன்று முறை போலீஸ் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளார். தற்போது சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் அவர் போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சி கொள்ள செய்துள்ளது. இவரது தாயார் முத்துலெட்சுமி இறந்து விட்டார். தீபிகாவிற்கு ராஜ் என்ற சகோதரனும், கவுசிகா என்ற சகோதரியும் உள்ளனர். தீபிகா கூறுகையில், எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். வருகிற 9ம் தேதி மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. அதிலும் நான் உறுதியாக தேர்வு பெறுவேன் என்றார்.

Related Stories:

>