அய்யர்மலை கோயில் பிரமோற்சவ விழாவில் முறைகேடு செயல் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

கரூர்: கரூர் குளித்தலை அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் உட்பட சிலர் மீது கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை அய்யர்மலையில் ரத்னகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சித்திரை பிரமோற்சவ விழாவில் முறைகேடு நடைபெற்றதாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனடிப்படையில், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று ஆவணங்களை ஆய்வு செய்த போது, 69ஆயிரத்து 671 ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றதாக தெரியவந்தததையடுத்து, கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி உட்பட சிலர் மீது ஐந்து பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: