திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ2.34 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேவஸ்தான நடவடிக்கை காரணமாக பக்தர்களின் வருகை குறைந்தது. மேலும், இலவச தரிசனம் டிக்கெட்டையும் ரத்து செய்தது. ₹300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் விஐபி தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே தற்போது சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப நகை மற்றும் பணத்தை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 796 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 10 ஆயிரத்து 99 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ2.34 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Related Stories: