தனியார் ரயில்கள் இயக்கம் தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. - பெல் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை..!!

டெல்லி: தனியார் ரயில்கள் இயக்கம் தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் பெல் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ரயில்களை இயக்குவதற்கான ஏலம் கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள 75 விழுக்காடு பாதைகளில் ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்கள் விருப்பம் காட்டாத நிலையில் டெல்லி, மும்பையில் 3 தொகுப்புகளில் ஐ.ஆர்.சி.டி.சி. ரயில்களை இயக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி.யின் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பாதைகளில் சிறப்பு பயன்பாட்டு பயணிகள் ரயிலை இயக்குவதற்கான பணிகளை ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் பெல் நிறுவனம் தொடங்கியுள்ளது. தனியார் ரயில் சேவைக்கான நிதி தேவைகளை பெல் நிறுவனமும், இயக்கம் சார்ந்த பணிகளை ஐ.ஆர்.சி.டி.சி.யும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் கூட்டு நடவடிக்கை தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி. மற்றும் பெல் நிறுவனம் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

Related Stories: