திண்டுக்கல் அருகே சைரன் காரில் வந்த சென்னையை சேர்ந்த போலி ‘போலீஸ் கமிஷனர்’கைது

பட்டிவீரன்பட்டி: சைரன் வைத்த காரில் வந்த சென்னையை சேர்ந்த போலி போலீஸ் கமிஷனர் கைதானார். சென்னை, ெகாளத்தூர், ஜீவா நகரை சேர்ந்தவர் விஜயன் (42). இவர் நேற்று காலை தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி போலீஸ் சைரன் பொருத்திய காரில் சென்று கொண்டிருந்தார். மேலும் காரின் முன்புற நம்பர் பிளேட்டில் உள்ள எண்களுக்கு இடையே அரசு வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் ‘‘ஜி’’ என்ற ஆங்கில எழுத்தும் இடம் பெற்றிருந்தது. வத்தலக்குண்டு, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி அருகே லட்சுமிபுரம் டோல்கேட் வழியாக வந்த அந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது, விஜயன் சாதாரண உடையில் இருந்துள்ளார். இதனால் போலீசார், அவரிடம் விசாரித்துள்ளனர்.

அதற்கு விஜயன் தன்னை போலீஸ் கமிஷனர் என கூறியுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அவரை பட்டிவீரன்பட்டி காவல்நிலையம் அழைத்து சென்றனர். தகவலறிந்து திண்டுக்கல் ஏடிஎஸ்பி சந்திரன் மற்றும் அதிகாரிகள் வந்து விஜயனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் போலி என தெரிந்தது. இதையடுத்து போலீசார், விஜயனை கைது செய்து,  அவரிடமிருந்த கார், ேபாலி ஐடி கார்டு, போலீஸ் உடை, போலி துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: