ரசாயனம் கலந்த கழிவுநீர் ஏரியில் கலப்பதாக புகார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே நீலோத்பாலாபுரம் கிராமத்தில் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடிநீர் தேவைக்கு பயன்படும் ஏரி தண்ணீரில் தனியார் தொற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த குடிநீர், நச்சு பொருட்கள் கலக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருத்தணி கோட்டாட்சியர் சத்தியாவை நேரில் சந்தித்து கிராம மக்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று கோட்டாட்சியர் சத்தியா தலைமையில் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் நீலோத்பாலாபுரம் ஏரியை பார்வையிட்டு அங்குள்ள தோல் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் அய்வு செய்தனர். அப்போது கிராம பெண்கள் கோட்டாட்சியரை சந்தித்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மூட வேண்டும், என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.

Related Stories: