சங்கரய்யாவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் தலைவர்கள் நேரில் நன்றி

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவிற்கு தமிழக அரசு ‘தகைசால் தமிழர் விருது’ அறிவித்ததற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். ‘தகைசால் தமிழர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதற்கான விருதை சங்கரய்யாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்க உள்ளார். இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, ‘தகைசால் தமிழர் விருது’க்கு சங்கரய்யாவை தேர்வு செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர், கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ‘தகைசால் தமிழர் விருது’க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் சங்கரய்யாவை தேர்வு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும் என்று கூறும் தார்மீக உரிமை அதிமுகவிற்கு இல்லை. தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றுவோம் என தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு உரிமை இல்லை. அணை கட்டக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

Related Stories:

>