வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க புடவைகளால் வேலி

கடத்தூர் : கடத்தூர் அருகே ராமியம்பட்டி, தென்கரைகோட்டை வரையுள்ள கவரமலை பகுதியில் பாஞ்சாலி நகர், பாத்திமாநகர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இக்கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, நிலக்கடலை, மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மலை அடிவாரத்தில் இருப்பதால், வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றி, குரங்குகள், மயில், மான் போன்ற வன விலங்குகள், அடிக்கடி வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

 இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே, பயிர்களை பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகள், தங்களது வயல்களை சுற்றி புடவைகளை வேலி போல கட்டியுள்ளனர். இதனால் இரவு நேரங்களில், விளை நிலங்களுக்கு வரும் வன விலங்குகள், புடவைகள் காற்றில் ஆடுவதை பார்த்து, மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாக கருதி சென்று விடுவதாகவும், இதனால் பயிர் சேதங்கள் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: