பிரிட்டன் பல்கலை.யில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.38.89 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது..!!

சென்னை: பிரிட்டனில் உள்ள பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறி 39 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் யூனிவர்சிட்டி ஆப் சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில்  அட்மிஷன் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி சாலிகிராமத்தை சேர்ந்த பொறியியல் மாணவர் வெங்கடேஷ்  என்பவரிடம் இருந்து 38 லட்சத்து 89 ஆயிரத்து 550 ரூபாய் பெற்றுக்கொண்டு அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

திடீரென இருவரும் செல்போனை சுவீட் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், கார்த்திக் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் மீது விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரின் தலைமறைவான தம்பதியினரை கைது செய்த போலீசார், அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>