அந்தியூர் பர்கூர் மலையில் வழுக்குப்பாறை நீர்த்தேக்கத் திட்டம்.: திமுக எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு

அந்தியூர்: அந்தியூர் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வழுக்குப்பாறை நீர்த்தேக்கத் திட்டம் குறித்து திமுக எம்.எல்.ஏ.வெங்கடாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பர்கூர் மலை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை மற்றும் என்ன மங்களம் ஏரியின் மழை நீரை மட்டுமே நம்பியே 90% விவசாயம் நடைபெற்று வருகிறது.

என்ன மங்களம் ஏரியின் தண்ணீர் வனப்பகுதிகளுக்குள் சென்று வீணாவதை தடுப்பதற்கு வழுக்குப்பாறை என்ற இடத்தில் நீர் தேக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் சுமார் 20,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக அந்தியூர் திமுக எம்.எல்.ஏ.வெங்கடாசலம் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பர்கூர் அருகே உள்ள கடவூர், தேவர் மலை உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் மலைவாழ் மக்கள் மற்றும் வனவிலங்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

அப்போது இதற்கான திட்ட அறிக்கை உடனடியாக தயாரிக்க திமுக எம்.எல்.ஏ.வெங்கடாசலம் அறிவுறுத்தினர். இதனையடுத்து தேவர் மலையில் உள்ள ஓடைகளையும் தடுப்பணைகளையும் ஆய்வு குழு பார்வையிட்டனர்.

Related Stories: