நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

நாகை: பனங்குடியில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய இழப்பீடு கோரி 3 ஊராட்சி கிராம மக்கள் போராடி வரும் நிலையில் நில அளவீடு பணிகளுக்காக அதிகாரிகள் வந்தனர். நரிமணம் கிராமத்தில் எல்லைக்கல் வைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரூ.31,500 கோடியில் சுமார் 620 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கப் பணிகளை தொடங்க உள்ளது. மறுவாழ்வு, மீள் குடியமர்வுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி நில உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாகையில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் வாகனங்களை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: