7 மணி நேரமல்ல; 70 ஆண்டுகள் சிறையில் அடையுங்கள்; ஆனால் 3 சிறப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள்: ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பேட்டி

டெல்லி: நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. ஒன்றிய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் கடந்த 9 மாதமாக விவசாய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்தார். டிராக்டரை தானே ஓட்டி வந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் விவசாய அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேரணியாக சென்றார்.

ராகுல் காந்தியுடன் வந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா , இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். காலையில் கைது செய்யப்பட சுர்ஜேவாலா, ஸ்ரீனிவாஸ் ஆகியோர் மாலையில் 7 மணி நேரம் கழித்து விடுதலை செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தொடர்பாளர் சுர்ஜேவாலா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். 7 மணி நேரமல்ல; 70 ஆண்டுகள் சிறையில் அடையுங்கள்; ஆனால் 3 சிறப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள் எனவும் வலியுறுத்தினார்.

Related Stories: