திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு அருகே கோடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மனீஷ்(41). உடற்கல்வி ஆசிரியர். இவர் தாமரைசேரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமரைசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
