கொலை வழக்கில் எம்எல்ஏ கணவர் ஜாமீன் ரத்து பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ‘பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் கிடையாது’ என கூறி, கொலை வழக்கில் மத்திய பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ கணவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சவுராசிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கணவர் கைது செய்யப்பட்டார். அவர் கீழ்மை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘குடிமக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க, மாவட்ட நீதித்துறையில் நிலவும் காலனித்துவ மனப்பான்மை மாற வேண்டும். நீதிபதிகள் சரியானதை எதிர்த்து நிற்கும்போது இலக்குகளை உருவாக்குகிறார்கள். நீதித்துறை ஒரு சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற ஜனநாயகத்தின் மூலக்கல்லாகும். அது அரசியல் அழுத்தங்கள் மற்றும் கருத்தாய்வுகளில் இருந்து விடுபட வேண்டும். இந்தியாவில் இரண்டு இணையான சட்ட அமைப்புகள் இருக்க முடியாது. பணக்காரர்கள், வளமுள்ளவர்கள், அரசியல் அதிகாரத்தை செலுத்துபவர்களுக்கு என தனி சட்டமும், நீதியைப் பெறுவதற்கான திறன்கள் இல்லாத வளங்கள் இல்லாத சிறிய, ஏழை மனிதர்களுக்கு என ஒரு சட்டமும் இல்லை,’’ என காட்டமாக தெரிவித்து, ஜாமீனை அதிரடியாக ரத்து செய்தனர்.

Related Stories: