முக்கிய ராணுவ ஆவணங்கள் பறிமுதல் பாக்.குக்கு உளவு பார்த்த காய்கறி சப்ளை வியாபாரி

புதுடெல்லி:  டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு பாதுகாப்பு தொடர்பான ஆவணங்கள் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ராஜஸ்தானின் பொக்ரானில் உள்ள ராணுவ முகாமிற்கு காய்கறிகளை விநியோகம் செய்யும் ஹபீப் கான் என்பவரது வீட்டில் செவ்வாயன்று திடீர் சோதனை நடத்தினார்கள். இதில் அவரது வீட்டில் இருந்து ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  விசாரணையில், ஹபீப் கானின் உறவினர்கள் பாகிஸ்தானில் வசித்து வருவதாகவும், இவர் அங்கு அவ்வப்போது சென்று வருவதும் அங்குள்ள சிலரது உதவியுடன் இந்திய ராணுவ ரகசிய ஆவணங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு வழங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விசாரணையில், ராணுவ வீரர் பரம்ஜித்துக்கு இந்த ரகசிய ஆவணங்களை கடத்துவதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக, இருவரும் ஏராளமான பணத்தை பெற்றதும், பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர் ந்து பரம்ஜித்தையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: