நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா

புதுடெல்லி:  சர்வதேச திரைப்பட  தயாரிப்பாளர்கள் சங்கத்தால், இந்திய சர்வதேச திரைப்பட விழா  அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரை படைப்புகளை ஒவ்வொரு வருடமும்  கொண்டாடும் இவ்விழா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து சிறந்த  திரைப்படங்களை திரையிடுகிறது. எனவே, 52வது இந்திய சர்வதேச திரைப்பட  விழாவின் போட்டி பிரிவில் கலந்துகொள்வதற்காக வரும் ஆகஸ்டு 31ம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம்.

வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில்  நடைபெற உள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  வெளியிட்டார். திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான சத்யஜித் ரே வாழ்நாள்  சாதனையாளர் விருது, இவ்வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் இந்திய சர்வதேச  திரைப்பட விழாவில் தொடர்ந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: