நீதி விசாரணைக்கு பிரான்ஸ் உத்தரவிட்ட பிறகும் ரபேல் ஊழல் பற்றி ஒன்றிய அரசு மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டும், ஒன்றிய அரசு மவுனம் காப்பது ஏன்?’ என்று காங்கிரஸ்கேட்டுள்ளது. நாட்டின் விமானப்படையை பலப்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை ரூ.59 ஆயிரம் கோடிக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வாங்குகிறது.இதில், ஊழல் நடந்துள்ளதாக  காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையி்ல், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக பிரான்ஸ் பத்திரிகைகள் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அது பற்றி நீதி விசாரணை நடத்த பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ரபேல் விமான ஊழல் மீண்டும் விஸ்வரூபவம் எடுத்துள்ளது. இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறுகையில், ‘‘தேசிய பாதுகாப்பு குறித்து மோடி அரசு நிறைய சத்தம் போடுகிறது. ஆனால், முதலாளி நண்பர்களுக்கு உதவும்போது நாட்டின் பாதுகாப்பை மறந்து விடுகிறது. பிரான்ஸ் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு, 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு குடிமகனும் கேட்கும் ஒரு கேள்வி, ‘இந்திய அரசு ஏன் இன்னும் மவுனமாக இருக்கிறது?’ என்பதே,’’ என்றார்.

* ராகுல் கேட்ட 4 கேள்விகள்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் வெளியிட்டு பதிவில், ‘ரபேல் ஊழல் பற்றி  மோடி அரசு ஏன் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடவில்லை?

1. குற்ற உணர்வா காரணமா?

2. நண்பர்களை காப்பாற்றவா?

3. நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒரு மாநிலங்களவை இருக்கையை விரும்பவில்லையா?

4. இவை அனைத்தும் சரியானவையா?’ என்று கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு நடத்தி உள்ளார்.   

Related Stories: