கமுதி அருகே அரசு சுகாதார நிலையத்துக்கு மத்திய அரசு விருது

கமுதி: கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மத்திய அரசின் ‘காயகல்ப்’ விருது கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு கீழராமநதி, கிளாமரம், காவடிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் சுத்தம் மற்றும் சுகாதார பணிகள் மிகவும் சிறப்பாக செயல்படுவதையொட்டி, மத்திய அரசின் 2019ம் ஆண்டிற்கான  ‘காயகல்ப்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசை  பேரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அசோக் மற்றும் மேலராமநதி மருத்துவ அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் பரமக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ரவீந்திரன் வழங்கினார். விருது பெற காரணமாக உள்ள அனைத்து சுகாதார அலுவலர்களையும் துணை இயக்குனர் பாராட்டினார்.

Related Stories: