திருப்பதியில் இலவச தரிசனம் கிடையாது

திருமலை: ‘சித்தூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க முடியாது,’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர் நேற்று கூறியதாவது: திருமலையில் பல்வேறு இடங்களில் உள்ள பக்தர்கள் ஓய்வறைகளில்  புனரமைப்பு பணி நடக்கிறது.பக்தர்கள் சிஆர்ஓ அலுவலகத்திற்கு வராமலே, ஓய்வறைகள் பெற திருமலையில் 6 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழுமலையானின் பூஜைக்கான  பூக்களை திருமலையிலேயே வளர்க்க 5 ஏக்கரில் தோட்டம் அமைக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், தரிசன டிக்கெட்எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணம் இல்லை. மேலும், தொற்று குறைந்த பிறகே  இலவச  தரிசனத்தில்  பக்தர்கள்  அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

* தடுப்பூசி போட்டால் சம்பளம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 14 ஆயிரம் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போடாதஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் போட ேவண்டாம் என்று ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.  ஊழியர்கள் தடுப்பூசி போடுவதற்கு வரும் 7ம் தேதி வரை அவகாசம் தந்துள்ளார்.

Related Stories: