கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்..? யார் போடக்கூடாது?

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் பாதிப்பு குறைந்து வருகிறது. தடுப்பூசி போடுவதால் வைரஸ் தீவிரத்தை தடுக்க முடியும். பலி எண்ணிக்கையை குறைக்க முடியும் என அரசு தெரிவித்து வருகிறது. இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட முன்வருதில்லை. பலருக்கு தடுப்பூசி போடுவதிலும் சந்தேகம் உள்ளது. இதில், யாரெல்லாம் தடுப்பூசி போடலாம் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் போடலாம்?

ரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட 20 வகையான பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் தடுப்பூசி போடலாம். இதய செயலிழப்புக்காக சிகிச்சை மேற்கொண்டவர்கள், இதய மாற்றுஅறுவை, இடது வெண்ட்ரிகுலார் செயலிழப்பு சிகிச்சை செய்தவர்கள், இதய குழாய் அடைப்புக்கு சிகிச்சை செய்தவர்கள், பிறவி இதய குறைப்பாடு உள்ளவர்கள், நீரிழிவு சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் பெரிய அளவிலான பாதிப்பு உள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம், 10 ஆண்டுகளாக நுரையீரல் தமணி ரத்த அழுத்த சிகிச்சை பெற்று வரும் நபர்கள், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு சிகிச்சை பெற்று வருபவர்கள், ஹீமோடையாலிசிஸ் செய்தவர்கள், சுவாசக்குழாய் சிகிச்சை பெற்று வருபவர்கள், தொண்டை புற்றுநோய், ரத்த புற்றுநோய், வெள்ளை அணுக்கள் பாதிப்பு, புற்றுநோய் சிகிச்சையில் உள்ளவர்கள், சிவப்பணுக்கள் குறைபாடு, ரத்த சோகை உள்ளவர்கள், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள், சிறப்பு குழந்தைகள், அமில வீச்சால் சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்,

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் போடலாம்.

யாரெல்லாம் போடக்கூடாது?

கடுமையான காய்ச்சல் தொற்று ஏற்பட்டு உள்ளவர்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போடக்கூடாது. தவிர, ஏற்கனவே தடுப்பூசி போட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களும், கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தடுப்பூசி போடக்கூடாது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 6 வாரங்களுக்கு பின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

Related Stories: